4/8/23

இருக்கன்குடி ஊர் பங்குனி பொங்கல் திருவிழா 07-04-2023

இருக்கன்குடி ஊர் பொதுமக்கள் அனைவரும் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு அம்மனுக்காக நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி இன்று 07-04-2023 மாலை 5 மணி முதல் விடியற்காலை 3 மணி வரை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் திரளான பக்தர்கள் அனைவரும் தங்கள் நேர்த்திக்கடன் ஆன அக்னி சட்டி எடுத்தல், ஆயிரம் கண் பானை, கரும்புத் தொட்டில் மற்றும் உருவம் எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மேளதாளம் முழங்க சென்று சிறப்பாக வழிபட்டனர். இரவு 10 மணிக்கு மேல் ஊர் பொதுமக்கள் அனைவரும் பொங்கல் பானை சுமந்து ஊரிலிருந்து அம்மன் கோவிலுக்கு நடந்து சென்று பொங்கல் வைத்து, அம்மனுக்கு மாவிளக்கு பூஜை செய்து, அனைவரும் குடும்பம் குடும்பமாக சென்று அம்மனுக்கு தேங்காய் பலம் உடைத்து சிறப்பு வழிபாடு செய்து இரவு 3 மணிக்கு மேல் வீடு திரும்பினர், முதல் நாள் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நிறைவு பெற்றது, இதில் ஊர் பொதுமக்களை, ஊர் நாட்டாமை, காலடி மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைத்து மக்களை ஒன்றிணைத்து விழாவை சிறப்பித்து வைத்தனர்.

8/6/22

இருக்கண்குடி ஸ்ரீமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா

இருக்கண்குடி ஸ்ரீமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா

இருக்கண்குடி ஸ்ரீமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா தொடக்கமாக இருக்கண்குடி "ஊர் குடும்பனார்" மற்றும் ஊர் நாட்டமை அவர்களுக்கு கோவில் பூசாரி பரிவட்டம் கட்டி சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இருக்கண்குடி ஸ்ரீமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா தொடக்கமாக இருக்கண்குடி "ஊர் குடும்பனார்" மற்றும் ஊர் நாட்டமை அவர்களுக்கு கோவில் பூசாரி பரிவட்டம் கட்டி சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. நாள் : 05-08-2022 இடம் : இருக்கண்குடி மாரியம்மன் கோவில்

Irukkanguid Panguni Pongal 2015

Irukkanguid Panguni Pongal 2015
https://youtu.be/2Q3sf18Bxxw

6/14/21

Irukkankudi Village Details

Village Irukkangudi
Block Sattur
District Virudhunagar
State Tamil Nadu
Country India
Continent Asia
Time Zone IST ( UTC + 05:30)
Currency Indian Rupee ( INR )
Dialing Code +91
Date format dd/mm/yyyy
Driving side left
Internet cTLD in
Language Tamil
Time difference 18 minutes
Latitude 9.3355271
Longitude 77.9867614

Irukkangudi is a village panchayat located in the Virudhunagar district of Tamil-Nadu state, India. The latitude 9.3355271 and longitude 77.9867614 are the geocoordinate of the Irukkangudi. Chennai is the state capital for Irukkangudi village. It is located around 487.7 kilometer away from Irukkangudi.. The other nearest state capital from Irukkangudi is Thiruvananthapuram and its distance is 138.6 KM. The other surrounding state capitals are Thiruvananthapuram 138.6 KM., Pondicherry 352.8 KM., Bangalore 407.6 KM., 

The surrounding nearby villages and its distance from Irukkangudi are 


Periagollapatti 2.1 KM
Sirukkulam 3.7 KM
Kathalampatti 5.3 KM
Kundalakuthur 6.2 KM
Chinnagollapatti 6.4 KM
Sattur 7.3 KM
Uppathur 8.3 KM
Nallamuthanpatti 9.7 KM
N.mettupatti 10.1 KM
Mulliseval 10.1 KM
Mettamalai 12.2 KM
Sankaranatham 12.2 KM
Padanthal 12.6 KM
Nalli 14.1 KM
Banduvarpatti 15.0 KM
Chinnakkamanpatti 16.1 KM
A.ramalingapuram
Venkateswarapuram
Sadayampatti

The official language of Irukkangudi The native language of Irukkangudi is Tamil and most of the village people speak Tamil. Irukkangudi people use Tamil language for communication. 

Irukkangudi Sun rise time


Irukkangudi village is located in the UTC 5.30 time zone and it follows Indian standard time(IST). Irukkangudi sun rise time varies 18 minutes from IST. The vehicle driving side in Irukkangudi is left, all vehicles should take left side during driving. Irukkangudi people are using its national currency which is Indian Rupee and its international currency code is INR. Irukkangudi phones and mobiles can be accessed by adding the Indian country dialing code +91 from abroad. Irukkangudi people are following the dd/mm/yyyy date format in day-to-day life. Irukkangudi domain name extension( cTLD) is .in .

The nearest railway station in and around Irukkangudi

The nearest railway station to Irukkangudi is Sattur which is located in and around 7.6 kilometer distance.
The following table shows other railway stations and its distance from Mamakudi.

  • Sattur railway station 7.6 KM.
  • Kovilpatti railway station 21.1 KM.
  • Tiruttangal railway station 24.9 KM.
  • Sivakasi railway station 25.9 KM.
  • Virudhunagar Jn railway station 29.2 KM.

Nearest airport to Irukkangudi

Irukkangudi nearest airport is Madurai Airport situated at 57.0 KM distance. Few more airports around

Irukkangudi are as follows.
  • Madurai Airport 57.0 KM.
  • Tuticorin Airport 68.2 KM.
  • Aranmula International Airport 131.9 KM.

Nearest districts to Irukkangudi

Irukkangudi is located around 28.8 kilometer away from its district head quarter Virudhunagar. The other nearest district head quarters is Virudhunagar situated at 34.4 KM distance from Irukkangudi . Surrounding districts from Irukkangudi are as follows.
  • Thoothukudi ( thoothukudi ) district 61.6 KM.
  • Madurai ( madurai ) district 66.5 KM.
  • Tirunelveli ( tirunelveli ) district 75.1 KM.
  • Sivaganga ( sivaganga ) district 80.4 KM.

Nearest town/city to Irukkangudi

Irukkangudi nearest town/city/important place is Kulasekarapuram located at the distance of 8.7 kilometer. Surrounding town/city/TP/CT from Irukkangudi are as follows.
  • Kulasekarapuram 8.7 KM.
  • Pudur 9.2 KM.
  • Pudupatti 16.9 KM.
  • Vedapatti 17.8 KM.
  • Ettayapuram 20.9 KM.

Schools in and around Irukkangudi

Irukkangudi nearest schools has been listed as follows.
  • S.R Government Higher Secondary School N Mettupatti 2.2 KM.
  • Govt Hr Sec School 6.9 KM.
  • Hindu Yadava Primary School Sadayampatti 7.1 KM.
  • Dr Radha Krishnan Matric Hr Sec School 7.4 KM.
  • SHN Ethel Harvey Girls School 7.6 KM.

Beaches in and around Irukkangudi

Irukkangudi nearest beach is Kayalpattinam Beach located at the distance of 87.6 kilometers. Surrounding beaches from Irukkangudi are as follows.
  • Kayalpattinam Beach 87.6 KM.
  • Tiruchendur Beach 95.6 KM.
  • Kanyakumari Beach 146.8 KM.
  • Kovalam Beach 152.7 KM.
  • Velankanni Beach 253.3 KM.

Irukkangudi map

The following Irukkangudi map is from google. Irukkangudi map consist of nearest villages and more information based on the zooming. You can enlarge or minimize the map zooming level based on your requirement.



Dear Irukkangudi people we have started this wikiedit.org to publish all village details around the world.
You are welcome to provide more information about Irukkangudi. It can be under the following category.

  • About Irukkangudi
  • History of Irukkangudi
  • Festivals in Irukkangudi
  • Irukkangudi Location
  • Irukkangudi Route map
  • Tourist places in Irukkangudi
  • Shops in Irukkangudi
  • Hospitals in Irukkangudi
  • Bank ATM in Irukkangudi
  • Bus train Irukkangudi
  • call taxi in Irukkangudi
  • Hotels in Irukkangudi
  • Marriage hall in Irukkangudi
  • Telephone numbers Irukkangudi
  • Police rescue help in Irukkangudi
  • Temple in Irukkangudi
  • Church in Irukkangudi  
  • business in Irukkangudi 
  • Land in Irukkangudi
  • House to-let Irukkangudi
  • Car sell buy Irukkangudi
  • Your experience about Irukkangudi

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், இருக்கன்குடி நடை திறக்கும் நேரம்

நடை திறக்கும் நேரம்

05:00 AM IST - 12:00 PM IST
01:00 PM IST - 08:00 PM IST

நடை சாற்றும் நேரம்

05:30 AM IST - 05:30 AM IST

இத்திருக்கோயிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில் காலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடை திறந்திருக்கும். இதர நாட்களான திங்கள், புதன், வியாழன், சனி ஆகிய நாட்களில் காலை 5.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரையும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடை திறந்திருக்கும்.(திருவிழாகாலங்கள் தவிர)

இருக்கண்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் தென் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்திபெற்ற பிரார்த்தனை ஸ்தலமாகும்

இருக்கண்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் தென் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்திபெற்ற பிரார்த்தனை ஸ்தலமாகும்.



இருக்கண்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் தென் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்திபெற்ற பிரார்த்தனை ஸ்தலமாகும். இத்திருக்கோயில் தேசிய நெடுஞ்சாலை 7ல் அமைந்துள்ள சாத்தூர் தாலுகாவிலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள இருக்கண்குடி கிராமத்தில் அமைந்துள்ளது. அருகிலுள்ள சாத்தூர் ரயில் நிலையத்திலிருந்து அடிக்கடி இத்திருக்கோயிலுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இத்திருக்கோயிலிலிருந்து 78 கி.மீ. தொலைவில் மதுரை சர்வதேச விமான நிலையம் மற்றும் 88 கி.மீ. தொலைவில் தூத்துக்குடி உள்நாட்டு விமான நிலையமும் அமைந்துள்ளன. சுமார் 450 வருடங்கள் பழமையான வரலாறு கொண்ட இத்திருக்கோயில் மூலவராக அருள்மிகு மாரியம்மன் திகழ்கிறார். கருவறை அழகிய விமானத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. அர்த்த மண்டபம் மற்றும் மகாமண்டபம் கருவறைக்கு அருகில் அமைந்துள்ளன.

அருள்மிகு நந்தீஸ்வரர் மற்றும் கொடிமரம் மகாமண்டபத்தின் முன்புறம் அமைந்துள்ளன. கருவறையின் தென்புறம் அரச மரத்தடியில் சித்திவிநாயகர் சன்னதியும் மற்றும் ஸ்ரீ வடக்குவாய்ச்செல்லியம்மன், ஸ்ரீ வெயிலுகந்தம்மன் சன்னதிகள் அமைந்துள்ளன. கருவறையின் வடக்குப் பகுதியில் ஸ்ரீ பைரவர், ஸ்ரீ வீரபத்திரர், ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ காத்தவராயர் சன்னதிகள் அமைந்துள்ளன. வெளிப்பிரகாரத்தின் தென்கிழக்குப் பகுதியில் ஸ்ரீ கருப்பசாமி சன்னதி அமைந்துள்ளது. திருக்கோயிலுக்கு வெளிப்பகுதியில் கயிறுகுத்தம்மன் சன்னதி தென்திசையில் அமைந்துள்ளது. அன்னை மாரியம்மன் வலது காலை மடக்கி இடது கால் தொங்கவிட்ட நிலையில் அமர்ந்திருக்கும் கோலம் மற்ற அம்மன் திருக்கோயில்களில் காண முடியாத சிறப்பான ஒன்றாகும்.




10/11/18

அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில்

மூலவர் : மாரியம்மன்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : அர்ச்சுனா, வைப்பாறு
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : -
ஊர் : இருக்கன்குடி
மாவட்டம் : விருதுநகர்
மாநிலம் : தமிழ்நாடு

வரலாறு 1

ஒரு கங்கையில் நீராடினாலே மிகவும் புண்ணியம். ஆனால் இங்குள்ள மாரி அர்ச்சுனா, வைப்பாறு என இரு கங்கைகளுக்கு நடுவே குடி கொண்டுள்ளாள். எனவே தான் இங்குள்ள மாரி இருக்கங்(ன்) குடி மாரி ஆனாள். ஆக, அம்மனை தரிசிப்பதுடன் இருகங்கைகளிலும் நீராடி, ஒரே நேரத்தில் முப்பெரும் பலனை அடையலாம். மாரியின் கோயிலுக்கு வடக்கே ஒடும் அர்ச்சுனா நதியானது, வத்திராயிருப்பிலுள்ள மகாலிங்க மலையில் இருந்து உற்பத்தியாகிறது. இந்த அர்ச்சுனா நதிக்கு ஒரு புராணக் கதை உண்டு. முன்னொரு காலத்தில் பஞ்சபாண்டவர்கள் காடுகளில் சுற்றித் திரிந்து பின் இந்த மலையடிவாரத்திற்கு வந்து குளிக்க நினைத்தார்கள். ஆனால், அவர்கள் குளிப்பதற்குரிய இடம் இல்லாததால் அர்ச்சுணன் கங்கா தேவியை வணங்கி, தன் அம்பால் பூமியை பிளந்தான். அந்த பிளவிலிருந்து தோன்றிய ஆறே அர்ச்சுணன் ஆறு எனப்பட்டது. இந்த ஆற்றுநீரில் பஞ்சபாண்டவர்கள் திரவுபதியுடன் நீராடி மகிழ்ந்தனர். அம்மன் கோயிலுக்கு தெற்கே ஓடுவது வைப்பாறு எனப்படும். இந்த வைப்பாற்றுக்கும் ஒரு தனி புராணக்கதை உண்டு. ஒரு சமயம் பொதிகை மலையின் அடிவாரத்தில் சிவசைலத்துக்கு வடக்கே சம்புகன் என்ற வேடன் தீயின் நடுவிலிருந்து கடும் தவம் புரிந்தான். இவனது இந்த செயலால் அயோத்தியில் ஒருவன் இறந்தான். அப்போது அயோத்தியை ஆண்ட ராமன் இந்த இறப்பை கேள்விப்பட்டு, தன் சேனைகளுடன் கிளம்பி சம்புகனை கொன்றார். அத்துடன் தன் நாட்டில் இறந்தவனையும் உயிர்ப்பித்தார். (இது ராமாயண உத்திரகாண்டத்தில் விளக்கப்பட்டுள்ளது). தவம் செய்த சம்புகனை கொன்ற பாவத்தால் பீடிக்கப் பெற்ற ராமன் பாவ விமோசனத்திற்காக சிவமலையில் சிவபெருமானை நிலை நிறுத்தி, வணங்கி தவம் செய்து பாவ விமோசனம் பெற்றார். அதன் பின் ராமன் தன் பரிவாரத்துடன் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு வந்து சேர்ந்தார். இங்கு வந்து ராமன், தன் மாலைக்கடனை முடிக்க தண்ணீர் தேடி கிடைக்காததால் வருந்தினார். அப்போது ராமனுடன் வந்த சாம்பவன் என்பவன், உலகிலுள்ள புண்ணிய தீர்த்தங்கள் எல்லாவற்றையும் சேர்த்து ஒரே குடத்தில் நிரப்பி, அந்தக் குடத்தை அகத்தியர் இங்கு புதைத்து வைத்திருப்பதாக கூறினான். இதைக்கேட்டு மகிழ்ந்த ராமன் தன் அம்பால் புதைத்து வைத்திருந்த குடத்தை உடைத்தார். இப்படி வைப்பி (புதையலில்)லிருந்து தோன்றிய ஆறுதான் வைப்பாறு எனப்பட்டது. இந்த வைப்பாறு கரிவலம் வந்த நல்லூர், சாத்தூர், கொல்லாம்பட்டி வழியாக பாய்ந்து இருக்கன்குடி அடைந்து, அங்கு ஏற்கெனவே ஒடிக்கொண்டிருக்கும் அர்ச்சுணா நதியுடன் கலந்து முத்துலாபுரம், விளாத்திகுளம் வழியாக சென்று கடலில் கலக்கிறது.

வரலாறு 2

மதுரை அருகிலுள்ள சதுரகிரி மலையில் தவமிருந்த சித்தர் ஒருவர், அம்பாள் தரிசனம் வேண்டி தவமிருந்தார். அப்போது அசரீரி ஒலித்தது. “”சித்தரே! அர்ஜுனா நதி மற்றும் வைப்பாறுக்கிடையே உள்ள மேட்டுப்பகுதிக்கு வா,” என்றது. அங்கே சென்ற சித்தருக்கு அம்பாள் காட்சி தந்தாள். தான் பார்த்த வடிவத்தை அவர் சிலையாகப் பிரதிஷ்டை செய்தார். பிற்காலத்தில் இந்த சிலை, ஆற்று மண்ணில் புதைந்து போனது. பிற்காலத்தில், இப்பகுதியில் வசித்த சிறுமி பசுஞ்சாணம் சேகரிக்கும் தொழில் செய்தாள். ஒரு சமயம் தரையில் வைத்த சாணக்கூடையை தூக்க முடியவில்லை. பெரியோரை அழைத்து வந்தாள். அப்போது, அந்த சிறுமியின் மூலமாக வெளிப்பட்ட மாரியம்மன், அவ்விடத்தில் தனது சிலை வடிவம் இருப்பதாகக் கூறினாள். அதன்படி அங்கு கிடைத்த சிலையை, பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர்.

வரலாறு 3

இரட்டை தீர்த்தம்

வனவாசம் சென்ற அர்ஜுனன் தன் தாகம் தீர, மேற்கு மலைத்தொடர்ச்சி மீது பாணம் எய்தான். அதிலிருந்து பொங்கிய நீர், நதியாக பெருக்கெடுத்தது. இந்நதி அவனது பெயராலேயே அழைக்கப்பெற்றது. இதேபோல், இலங்கை சென்ற ராமபிரான், பூஜைக்காக அந்த மலை மீது அம்பெய்தார். அப்போது பிறந்த நதி வைப்பாறு எனப்பட்டது. இவ்விரு நதிகளும் கங்கைக்கு ஒப்பானது என்பதால், இரு கங்கைக்கும் நடுவில் அமைந்த கோயில் என்பதை உணர்த்தும்விதமாக “இருகங்கைக்குடி’ எனப்பட்ட ஊர் “இருக்கன்குடி’ என மருவியது. பக்தர்கள் இரண்டு தீர்த்தங்களிலும் நீராடி அம்பிகையை வழிபட்டு வரலாம்.

ஆதி அம்பிகை

அம்பாள், இங்கு சிவ அம்சமாக இருப்பதால், சன்னதி எதிரே நந்தி இருக்கிறது. தினமும் அம்பாளுக்கு அபிஷேகம் நடக்கும் போது திரை போடப்பட்டு விடும். ஆனால், பவுர்ணமியன்று நடக்கும் அபிஷேகத்தை பக்தர்கள் காணலாம். கோயிலில் இருந்து சற்று தூரத்தில், அம்பாள் கிடைத்த இடத்தில், ஆதி அம்பாள் சன்னதி உள்ளது. இங்கு அம்பாள் உருவம் பொறித்த சூலம் மட்டும் வைக்கப்பட்டுள்ளது. ஊருக்குள் உற்சவ அம்பிகைக்கு கோயில் உள்ளது. ஆடி வெள்ளியன்று, இவள் பிரதான கோயிலுக்குள் வருவாள்.

கரும்புத் தொட்டில்

குழந்தை இல்லாதவர்கள் அம்பாளுக்கு கரும்புத்தொட்டில் நேர்ச்சை (நேர்த்திக்கடன்) செய்வதாக வேண்டுகின்றனர். கரும்பில் தொட்டில் கட்டி, அதில் குழந்தையைப் படுக்க வைத்து சன்னதியை வலம் வருகின்றனர். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அக்னிச்சட்டி, அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். வயிற்று வலி தீர மாவிளக்கு தீபமேற்றுகின்றனர். இதற்காக தனி மண்டபம் உள்ளது. பிரகாரத்தில் வடக்குவாசல் செல்வி, வெயிலுகந்தம்மன், வீரபத்திரர், பைரவர், காத்தவராயர், பேச்சியம்மன், முப்பிடாதி உள்ளனர்.

பிரார்த்தனை தலம்

பக்தர்களின் குறை தீர்க்கும் பிரதான பிரார்த்தனை தலம் இது. கண் நோய் உள்ளவர்கள், “வயனம் இருத்தல்’ என்ற விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். ஒரு சிலர் நோய் தீரும் வரை இங்கேயே இருந்து விடுகின்றனர். சிலர் ஒரு குறிப்பிட்ட நாளில் வந்து தங்கிவிட்டு மறுநாள் செல்கின்றனர். இவர்கள் தங்குவதற்கு கோயிலில் மண்டபம் உள்ளது. இவர்கள் அம்பாளின் அபிஷேக தீர்த்தத்தை கண்ணில் விட்டுக்கொள்ள, நோய் நிவர்த்தியாவதாக நம்பிக்கை. விவசாயிகள் இந்த தீர்த்தத்தை நிலத்தில் தெளிக்கின்றனர். அறுவடையானதும் அம்பிகைக்கு நவதானியம், நெல், காய்கறி காணிக்கை கொடுக்கின்றனர். கால்நடைகள் நோயின்றி இருக்கவும் இத்தீர்த்தம் கொடுப்பதுண்டு. அம்மை நோய் உள்ளவர்கள், அம்பிகைக்கு ஆமணக்கு விதையைக் காணிக்கையாக்கி வழிபடுகின்றனர். அம்பாளுக்கு உருவ காணிக்கை, கண்மலர் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.