4/8/23
இருக்கன்குடி ஊர் பங்குனி பொங்கல் திருவிழா 07-04-2023
இருக்கன்குடி ஊர் பொதுமக்கள் அனைவரும் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு
அம்மனுக்காக நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி இன்று 07-04-2023 மாலை 5 மணி
முதல் விடியற்காலை 3 மணி வரை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் திரளான
பக்தர்கள் அனைவரும் தங்கள் நேர்த்திக்கடன் ஆன அக்னி சட்டி எடுத்தல், ஆயிரம் கண்
பானை, கரும்புத் தொட்டில் மற்றும் உருவம் எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை ஊர்
பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மேளதாளம் முழங்க சென்று சிறப்பாக வழிபட்டனர். இரவு
10 மணிக்கு மேல் ஊர் பொதுமக்கள் அனைவரும் பொங்கல் பானை சுமந்து ஊரிலிருந்து அம்மன்
கோவிலுக்கு நடந்து சென்று பொங்கல் வைத்து, அம்மனுக்கு மாவிளக்கு பூஜை செய்து,
அனைவரும் குடும்பம் குடும்பமாக சென்று அம்மனுக்கு தேங்காய் பலம் உடைத்து சிறப்பு
வழிபாடு செய்து இரவு 3 மணிக்கு மேல் வீடு திரும்பினர், முதல் நாள் பொங்கல் வைக்கும்
நிகழ்ச்சி நிறைவு பெற்றது, இதில் ஊர் பொதுமக்களை, ஊர் நாட்டாமை, காலடி மற்றும்
இளைஞர்கள் ஒன்றிணைத்து மக்களை ஒன்றிணைத்து விழாவை சிறப்பித்து வைத்தனர்.
Subscribe to:
Posts (Atom)